IND-A vs OMN Match 12 ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஓமன் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை சந்திக்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

Advertisement

IND-A vs OMN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஓமன்
  • இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
  • நேரம் - அக்.23 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)

IND-A vs OMN T20I Pitch Report

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது அல் அமேரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 103 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 43 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 59 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 148 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 220 ரன்களாக இருக்கிறது. இதனால் நிச்சயம் பேட்டர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

IND-A vs OMN: Where to Watch?

Advertisement

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். மேற்கொண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

India A vs Oman Possible XIs 

India A Probable Playing XI: அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கே), ஆயுஷ் பதோனி, நேஹல் வதேரா, ராமன்தீப் சிங், நிஷாந்த் சிந்து, அன்ஷுல் கம்போஜ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ரசிக் தார் சலாம், வைபவ் அரோரா

Advertisement

Oman Probable Playing XI : ஜதீந்தர் சிங் (கே), அமீர் கலீம், வாசிம் அலி, ஹம்மாத் மிர்சா, கரண் சோனாவலே, முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், மெஹ்ரான் கான், சித்தார்த் புக்கப்பட்டினம், சமய் ஸ்ரீவஸ்தவா, முசாஹிர் ராசா

IND-A vs OMN T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங்
  • பேட்டர்கள் - ஜதீந்தர் சிங், நேஹால் வதேரா, திலக் வர்மா (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர் - அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), ரமந்தீப் சிங், மெஹ்ரான் கான், அமீர் கலீம்
  • பந்துவீச்சாளர்கள் - ரசிக் சலாம், வைபப் அரோரா, முசாஹிர் ரஸா

IND-A vs OMN Match 12 Dream11 Prediction, Today Match IND-A vs OMN , IND-A vs OMN Dream11 Team, India A vs Oman, Fantasy Cricket Tips, IND-A vs OMN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News