அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அண்டர்19 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய ஆணி 5 முறையும், ஆஸ்திரேலிய அணி 3 முறையும் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளன. இதனால் வலுமையான இரு அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா யு19 அணி vs ஆஸ்திரேலியா யு19 அணி
  • இடம் - வில்லோமூர் பார்க், பெனோனி
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

நேரலை

ஐசிசி அண்டர் 19 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சில் கண்டு களிக்கலாம். அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை செய்யப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் பெனோனி கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் இந்த மைதானத்தில் ரன்களைச் சேர்ப்பது கடினம் என்பதால், பேட்டர்கள் பொறுமையாக விளையாடி ரன்களைச் சேர்ப்பது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • இந்திய யு19 அணி - 02
  • ஆஸ்திரேலிய யு19 அணி -  01

உத்தேச லெவன்

இந்தியா யு19 அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கே), பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ், சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, நமன் திவாரி

Advertisement

ஆஸ்திரேலியா யு19 அணி: ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ் சிங், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கே), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ரியான் ஹிக்ஸ், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- ஆரவல்லி அவினிஷ், ரியான் ஹிக்ஸ்
  • பேட்ஸ்மேன்கள்- உதய் சஹாரன், சச்சின் தாஸ், ஹாரி டிக்சன், ஆலிவர் பீக்
  • ஆல்ரவுண்டர்- முஷீர் கான்(கேப்டன்), டாம் எட்வர்ட் கேம்ப்பெல்
  • பந்துவீச்சாளர்கள்- ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, டாம் ஸ்ட்ரெக்கர்(துணைக்கேப்டன்)

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News