யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Jan 27 2024 19:31 IST
Image Source: Google

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் அமெரிக்கா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா யு19 அணி vs அமெரிக்க யு19 அணி
  • இடம் - மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஐசிசி அண்டர் 19 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சில் கண்டு களிக்கலாம். அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை செய்யப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்தியா - அமெரிக்க அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் ப்ளூம்ஃபோன்டைன் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியில் 300 அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டது. இருப்பினும் இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

உத்தேச லெவன்

இந்தியா யு19 அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கே), பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ், சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், தனுஷ் கவுடா, சௌமி பாண்டே, நமன் திவாரி

யுஎஸ்ஏ யு19 அணி: பிரன்னவ் செட்டிபாளையம், பவ்யா மேத்தா, சித்தார்த் கப்பா, ரிஷி ரமேஷ் (கே), உட்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, அமோக் அரேபல்லி, பார்த் படேல், குஷ் பாலலா, ஆரின் நட்கர்னி, அதீந்திர சுப்ரமணியன், ஆர்யா கார்க்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஏ ராவ்
  • பேட்டர்ஸ்: உதய் பிரதாப் சஹாரன் (துணை கேப்டன்), ஆதர்ஷ் சிங், சித்தார்த் கப்பா
  • ஆல்-ரவுண்டர்கள்: அர்ஷின் குல்கர்னி, பி மோலியா,பார்த் பட்டேல், முஷீர் கான் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: நமன் திவாரி, ஆர்யா கர்க், சௌமி பாண்டே.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை