தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2aaவது டெஸ்ட் ஆட்டம் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 202 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்தது.

Advertisement

அதன்பின் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

Advertisement

தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், எய்டன் மார்கிரமும் களமிறங்கினர். இதில் மார்கிரம் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தி துரிதமாக ரன் சேர்த்தார்.

இதையடுத்து, ஷர்துல் தாக்குர் அறிமுகப்படுத்தப்பட அவர் மார்கிரமை 31 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து களமிறங்கிய கீகன் பீட்டர்சென் எல்கருடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார். 

நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இணையைப் பிரித்தார். பீட்டர்சன் 28 ரன்களுக்கு அஸ்வினிடம் வீழ்ந்தார்.

இதன்பிறகு, 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை. ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

எல்கர் 46 ரன்களுடனும், ராசி வாண்டர் டுசன் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு இன்னும் 122 ரன்களும், இந்திய வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News