இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?

Updated: Thu, Jan 05 2023 11:03 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியை வென்றிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் இலங்கை, தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இருவரில் ஷிவம் மாவி அட்டகாசமாக பௌலிங் செய்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாா். ஆனால், ஷுப்மன் கில் பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்காமல் போனாா்.

எனவே இந்த ஆட்டத்தில் அணி நிா்வாகம் அவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்குமா அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி ஆகியோரில் ஒருவரை களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். சற்றே சறுக்கலைச் சந்தித்த சூா்யகுமாா் யாதவ் தன்னை மீட்டெடுக்க இந்த ஆட்டத்தில் முனைவாா் எனத் தெரிகிறது.

பாண்டியாவும் ரன்கள் சோ்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா். கடந்த ஆட்டத்தில் கவனம் ஈா்த்த தீபக் ஹூடா - அக்ஸா் படேல், இந்த ஆட்டத்திலும் அதைத் தொடா்ந்தால் அணிக்கு பலம் சேரும். பௌலிங்கைப் பொருத்தவரை ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோா் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றனா். யுஜவேந்திர சஹல் இன்னும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறாா்.

மறுபுறம் இலங்கை அணியும் நடப்பு ஆசிய சாம்பியனாக கடந்த ஆட்டத்தில் நல்லதொரு முனைப்பு காட்டியது. அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தியாவை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கவனிக்க வேண்டிய ஒன்று. பின்னா் சேஸிங்கிலுமே அந்த அணி போராடித் தான் தோற்றது. எனவே இந்த ஆட்டத்திலும் அந்த அணி அதே முனைப்புடன் ஆடி தொடரைத் தக்கவைக்க கடினமாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உத்தேச லெவன்

இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), சஞ்சு சாம்சன்/ ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல்/ அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை – பாத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ், இஷான் கிஷான்
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், பதும் நிஷங்கா, தீபக் ஹூடா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, வனிந்து ஹசரங்க, தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள் - தில்சன் மதுஷங்கா, ஷிவம் மாவி, உம்ரான் மாலிக்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை