இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸின் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Advertisement

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜாவும் அஸ்வினும் இணைந்து அபாரமாக விளையாடினர். ஜடேஜா சிறப்பாக ஆட, அஸ்வின் அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அஸ்வின் அரைசதம் அடிக்க, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஸ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 500 ரன்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சதமடித்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 468 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 102 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News