IND vs BAN, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Sep 14 2023 22:09 IST
IND vs BAN, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. 

முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் நாளைய போட்டியில் இளம் வீரர்களான திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பிரஷித் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம் 
  • இடம் - ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
  • நேரம் - மாலை 3 மணி

மைதானம்

இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும், அதே சமயம் பேட்ஸ்மேன்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு பெரிய ரன்களை எடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே எதிரணி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மொத்தம் - 39
  • இந்தியா - 31
  • வங்கதேசம் - 07
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

வங்கதேசம்: முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கே), தாஹீத் ஹிர்டோய், ஷமிம் ஹுசைன், நாசும் அகமது, மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத். 

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, தாஹீத் ஹிரிடாய்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ஷகிப் அல் ஹசன், ஹர்திக் பாண்டியா, மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள்- தஸ்கின் அகமது, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் (துணை கேப்டன்)

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை