இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Oct 11 2024 21:16 IST
Image Source: Cricketnmore

India vs Bangladesh 3rd T20I Dream11 Prediction: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

IND vs BAN 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- இந்தியா vs வங்கதேசம்
  • இடம் -  ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - அக்டோபர் 12, இரவு 7 மணி 

IND vs BAN 3rd T20I Pitch Report

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 போட்டி ஹைதாராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் இதுவரை 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரண்டு முறையும் சேஸிங் செய்த அணிகளே வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இங்கு டாஸ் முக்கிய பங்கினை வகிக்கும். மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 196 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 198 ரன்களாகவும் உள்ளன. இதனால் இங்கு நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது.  

IND vs BAN 3rd T20I: Where to Watch?

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ஸ்பொர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காண முடியும்.

IND vs BAN T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 16
  • இந்தியா - 15
  • வங்கதேசம் - 01

India vs Bangladesh 3rd T20I Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ்(கே), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக்/திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்/ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்/ஹர்ஷித் ரானா.

வங்கதேசம் உத்தேச லெவன்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

IND vs BAN 3rd T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), லிட்டன் தாஸ்
பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, அபிஷேக் சர்மா
ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நிதீஷ் குமார், ரிஷாத் உசேன், மெஹ்தி ஹசன் மிராஸ்
பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், வருண் சக்ரவர்த்தி

IND vs BAN 3rd T20I Dream11 Prediction, IND vs BAN Dream11 Prediction, Today Match IND vs BAN, IND vs BAN T20I Series, IND vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Bangladesh

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை