இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியும் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. இதனையடுத்து அந்த அணி இன்று முதல் சென்னையில் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், விராட் கோலியும் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு தன்னுடை பேட்டை விராட் கோலி பரிசளித்துள்ளார். இதனை ஆகாஷ் தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News