இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன.25) ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
  • இடம் - ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - காலை 9.30 மணி 
Advertisement

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்றாலும், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் இருப்பது அணிக்கும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் கேஎல் ராகுல் அணியின் பேட்டராக மட்டுமே இத்தொடரில் செயல்படவுள்ளார். இதனால் அறிமுக வீரர் துருவ் ஜுரெல் அல்லது ஸ்ரீகர் பரத் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பந்துவீச்சில் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடஜா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் இணை இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை மற்றொரு பரிணாமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக பாஸ்பால் என்றழைக்கப்படும் அதிரடியான ஆட்ட அணுகுமுறையை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி வருவதால், இந்திய மண்ணில் எவ்வாறு செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

அணியின் பேட்டிங்கில் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸின் மீதான எதிர்பார்ப்பகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இருப்பினும் ஜேக் லீச், மார்க் வுட், பென் ஃபோக்ஸ் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானம் பேட்டர்களுக்கு சாதமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமளித்து வருகிறது. இதனால் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இது சொற்கபுரியாகவே திகழ்ந்து வருகிறது. இதனால் இரு அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேரலை 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். அதேசயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை நேரலையில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 131
  • இந்தியா - 31
  • இங்கிலாந்து - 50
  • முடிவில்லை - 50
Advertisement

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஸரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது, ஸாக் லீச், மார்க் வூட்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோவ், கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, பென் ஸ்டோக்ஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ஸாக் கிரௌலி
  • ஆல்ரவுண்டர்கள்: ரவி அஸ்வின் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஜோ ரூட், அக்ஸர் படேல்
  • பந்து வீச்சாளர்: ரெஹான் அகமது.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News