India vs England 3rd ODI Dream11 Prediction: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி முதலிரண்டு போட்டிகளில் அடந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

IND vs ENG 3rd ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள்- இந்தியா vs இங்கிலாந்து
இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
நேரம் - பிப்வரி 12, மதியம் 1.30 மணி

IND vs ENG 3rd ODI Pitch Report

இப்போட்டி அஹ்மதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு இதுவரை 36 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 19 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 17 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி 237 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்சமாக ரன்களாக 365 ரன்களாக உள்ளது. மேற்கொண்டு இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் கிடைக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

IND vs ENG 3rd ODI: Where to Watch?

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

IND vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 109
  • இந்தியா - 60
  • இங்கிலாந்து - 44
  • முடிவில்லை - 05
Advertisement

IND vs ENG 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
  • பேட்டர்கள் - ரோஹித் சர்மா, ஜோ ரூட், பென் டக்கெட் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), அக்ஸர் படேல், லியாம் லிவிங்ஸ்டோன்
  • பந்து வீச்சாளர் - அடில் ரஷீத், ஹர்ஷித் ரானா

India vs England 3rd ODI Probable Playing XI

India 3rd ODI Probable Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், அக்ஸர் படேல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி/குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா/அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

Advertisement

England 3rd ODI Probable Playing XI : பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், மார்க் வுட்/ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.

IND vs ENG 3rd ODI Dream11 Prediction, IND vs ENG Dream11 Prediction, Today Match IND vs ENG, IND vs ENG ODI Series, IND vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs England

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News