இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 4th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IND vs ENG 4th T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
- நேரம் - ஜனவரி 31, இரவு 7 மணி
IND vs ENG 4th T20I Pitch Report
இப்போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 2 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி 166 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்சமாக ரன்களாக 206 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
IND vs ENG 4th T20I: Where to Watch?
இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
IND vs ENG T20I Head To Head Record
- மோதிய போட்டிகள் – 27
- இந்தியா - 15
- இங்கிலாந்து - 12
IND vs ENG 4th T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
- பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஹாரி புரூக், பென் டக்கெட் (துணைக்கேப்டன்), திலக் வர்மா
- ஆல்ரவுண்டர் - ஹார்டிக் பாண்டியா, பிரைடன் கார்ஸ்
- பந்து வீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் சக்ரவர்த்தி (கேப்டன்), அர்ஷ்தீப் சிங்.
India vs England 3rd T20I Probable Playing XI
India 4th T20I Probable Playing XI: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்/ரமந்தீப் சிங், துருவ் ஜூரெல்/ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி.
England 4th T20I Probable Playing XI : பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித்/ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்.
IND vs ENG 4th T20I Dream11 Prediction, IND vs ENG Dream11 Prediction, Today Match IND vs ENG, IND vs ENG T20I Series, IND vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs England
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.