IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!

Updated: Sat, Jan 21 2023 16:25 IST
IND vs NZ, 2nd ODI: New Zealand have been rolled over for their third lowest ODI total against India (Image Source: Google)

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கடந்த 18 ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் ஆடி 349 ரன்கள் குவித்தது. 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், அந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி ஓவரில் ஃபின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பி ஜோடி சேர்ந்த மைக்கேஎல் பிரேஸ்வெல் - கிளென் பிலீப்ஸ் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து சமாளித்தனர். ஆனால் அதன்பின் 22 ரன்களில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் விக்கெட்டை இழந்தார். பின் 37 ரன்களை எடுத்திருந்த கிளென் பிலீப்ஸ் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மிட்செல் சாண்ட்னர் 27 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 34.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை