பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள் - ரோஹித் சர்மா!

Updated: Sat, Jan 21 2023 19:53 IST
IND vs NZ, 2nd ODI: Whatever was asked of the bowlers, they have delivered; says Rohit Sharma (Image Source: Google)

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி 349 ரன்களை குவித்து, இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ராய்பூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ரோஹித் சர்மா 51, ஷுப்மன் கில் 40 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்து விராட் கோலி 11 (9), இஷான் கிஷன் 8 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி 20.1 ஓவர்களில் 111/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, “கடந்த 5 போட்டிகளில், பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள். என்ன சொல்கிறமோ, அதனை அப்படியே சிறப்பாக செய்கிறார்கள். இந்தியாவில் இதற்குமுன், இப்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசியதை பார்த்ததில்லை. வெளிநாட்டு பிட்ச்களில்தான் இப்படி ஸ்விங், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும்.

நியூசிலாந்து அணி 250+ ரன்களை அடித்தால், அதனை துரத்துவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். பிட்ச் அந்தளவுக்கு பேட்டிங் செய்ய கடினமானதுதான். சிராஜ், ஷமி ஆகியோர் சரியான ஃபார்மில் இருக்கிறார்கள். முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தோம். தற்போது பீல்டிங்கை தேர்வு செய்தோம். கடைசிப் போட்டியில் டாஸ் வென்றால், எதை தேர்வு செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை