IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!

Updated: Thu, Oct 24 2024 11:36 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. 

இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே நீதானமாக விளையாடிய நிலையில், அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. பின்னர் இப்போட்டியில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்திருந்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து கான்வேவுடன் இணைந்த வில் யங்கும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Also Read: Funding To Save Test Cricket

இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் வில் யங் 18 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரவிச்சந்திரன் ஆஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தர். அதன்பின் கான்வேவுடன் இணைந்துள்ள ரச்சின் ரவீந்திராவும் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து வருகிறார். இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கான்வே 47 ரன்களுடனும், ரச்சின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை