IND vs NZ, 2nd Test: இந்திய அணியின் உத்தேச லெவன்; ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை (அக்டோபர் 24) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ரியான் டென் டெஸ்காட் தெரிவித்துள்ளார். முன்னதாக கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ஷுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்து விளையாடிய ரிஷப் பந்த் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மட்டும் செய்த அவர், ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் இருவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இருப்பார்களாக என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் விளையாட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து எந்த வீரர் நீக்கப்படுவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் ஷுப்மன் கில்லிற்கு மாற்றாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் கேஎல் ராகுல் இரண்டு இன்னிங்ஸிலும் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளார். இதனால் அவரது இடமே தற்சமயம் சிக்கலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, சர்பராஸ் கான்/கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.