இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பந்த் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடங்கியது. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதங்களை பதிவுசெய்ததுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரிஷப் பந்த் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில் 70 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி, இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News