India vs New Zealand 1st Test Dream11 Prediction: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.

Advertisement

இதனைத்தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 16) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், நியூசிலாந்து அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்த கையோடும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs NZ 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - அக்.16, காலை 9.30 மணி

IND vs NZ 1st Test Pitch Report

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது. இங்கு டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறது. இங்கு இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 10முறை  முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 354 ரன்களாக உள்ளது, இது ஆட்டம் முன்னேறும் போது குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்குள்ள ஆடுகளம் மிகவும் சமநிலையானது மற்றும் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

IND vs NZ 1st Test: Where to Watch?

Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

IND vs NZ Test  Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 62
  • இந்தியா - 22
  • நியூசிலாந்து - 13
  • முடிவில்லை - 27

India vs New Zealand 1st Test Probable Playing XI

Advertisement

இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில் ஓ'ரூர்க்.

IND vs NZ 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டெவான் கான்வே, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா.
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, அஜாஸ் படேல்.
Advertisement

IND vs NZ 1st Test Dream11 Prediction, IND vs NZ Dream11 Prediction, Today Match IND vs NZ, IND vs NZ Test Series, IND vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News