India vs New Zealand 2nd Test Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

 

Advertisement

இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

IND vs NZ 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
  • நேரம் - அக்.24, காலை 9.30 மணி

IND vs NZ 2nd Test Pitch Report

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுய்செய்து அசத்தியுள்ளன. மேற்கொண்டு இந்த மாஇதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 430 ரன்களாக உள்ளது. அதேசமயம் நான்காவது இன்னிங்ஸ் சராசரி 237 ரன்களாக உள்ளது. அதனால் இந்த மைதானத்தில் நேரம் செல்ல செல்ல பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

IND vs NZ 2nd Test: Where to Watch?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

IND vs NZ Test  Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 63
  • இந்தியா - 22
  • நியூசிலாந்து - 14
  • முடிவில்லை - 27
Advertisement

India vs New Zealand 2nd Test Probable Playing XI

இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல்/சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம் (கே), டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல்,கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓரூர்க்

Advertisement

IND vs NZ 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டெவான் கான்வே, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, அஜாஸ் படேல்.

IND vs NZ 2nd Test Dream11 Prediction, IND vs NZ Dream11 Prediction, Today Match IND vs NZ, IND vs NZ Test Series, IND vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs New Zealand

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News