ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்

Updated: Thu, Nov 18 2021 21:55 IST
Ind Vs NZ : Gautam Gambhir Explains Why Rahul Dravid Will Be A Successful Coach For Team India (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முன்னதாக கவுதம் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். தற்போது அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன்.

அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். ஓய்வறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும். அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார் அவர் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடியுள்ளார்.

Also Read: T20 World Cup 2021

அவர் இந்திய அணியை கேப்டன்சி செய்துள்ளார், அவரது பணி ஒழுங்கு, கட்டுக்கோப்பு என்பது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். எனவே அவர் நிறைய உத்திகள், கிரிக்கெட் நுணுக்கங்கள், ஸ்பிரிட், என்று பல விஷயங்களை அணிக்கு தாரைவார்த்தளிப்பார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை