இந்தியா - இலங்கை அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதன்பின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி அடுத்த 4 விக்கெட்டுகளை 23 ரன்களில் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.