இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 4ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் சர்மா தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில், துனித் வல்லாலகே வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 3 ரன்களிலும், 7 பவுண்டரி 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவும், துனித் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் இஷன் - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 39 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் துனித் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் துனித் வெல்லாலகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட் ஹாலை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து சரித் அசலங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த அக்ஸர் படேலும் 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News