IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!

Updated: Sat, Jul 24 2021 11:22 IST
IND vs SL : India have won the toss and have opted to bat (Image Source: Google)

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது. 

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். 

இப்போட்டிக்கான இந்திய அணியில் நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார், சஞ்சு சாம்சன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். 

இலங்கை -மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜ்பக்ஷ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, அகிலா தனஞ்செய,துஷ்மந்தா சாமிரா, பிரவீன் ஜெயவிக்ரம.

இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, நிதீஷ் ராணா, ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சக்காரியா. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை