இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக விளையாடிய் 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இரு அணியிலும் ரிஷப் பந்த் அணியில் இடன் பெறவில்லை. இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

 “எனவே, டி20யில் இடம் பிடிப்பதற்கான வரிசையில் இப்போது ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அது ஏற்கனவே அட்டைகளில் இருந்தது தான். இஷான், ருதுராஜ், சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான டாப் 4. 

 

Advertisement

ரஜத் படிதார் கடைசி பேட்டிங் இடத்திற்கு ஹூடா மற்றும் திரிபாதியுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த டி20 அணி எப்படி செல்கிறது என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக உள்ளது. இது மிகவும் உற்சாகமான அணி மற்றும் 2024 அணியின் மையமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News