IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை அணி பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி டி20 தொடரையாவது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அறிமுக வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் இலங்கை அணியிலும் இருவர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
இந்தியா (விளையாடும் லெவன்): ஷிகர் தவான் (கே), பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.
இலங்கை (விளையாடும் லெவன்): அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), ஆஷென் பண்டாரா, வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, அகிலா தனஞ்சாய, துஷ்மந்தா சமீரா.