INDW vs AUSW, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
- இடம் - டி ஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
- நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
நேரலை
ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்தப் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
பிட்ச் ரிப்போர்ட்
டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடக்க ஓவர்களில் பந்துவீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வுசெய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 31
- இந்திய மகளிர் அணி - 07
- ஆஸ்திரேலிய மகளிர் அணி - 23
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
இந்திய மகளிர் அணி - ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஜமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்நே ராணா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங் தாக்கூர்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி- அலிசா ஹீலி (கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், மேகன் ஷாட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், ஜெஸ் ஜொனசன்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: அலிசா ஹீலி (கேப்டன்)
- பேட்டர்ஸ்: எலிஸ் பெர்ரி (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
- ஆல்ரவுண்டர்கள்: தீப்தி ஷர்மா, தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், பூஜா வஸ்த்ரகர்
- பந்து வீச்சாளர்: கிம் கார்த், மேகன் ஷட்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.