INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Sat, Jan 06 2024 20:53 IST
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை வுள்ளது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம் - டி ஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்தப் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடக்க ஓவர்களில் பந்துவீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வுசெய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • இந்திய மகளிர் அணி - 08
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி - 23
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்திய மகளிர் அணி - ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங், டிடாஸ் சாது

ஆஸ்திரேலிய மகளிர் அணி- அலிசா ஹீலி (கே), பெத் மூனி, தாஹிலா மெக்ராத், எலிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஷட், டார்சி பிரவுன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: அலிசா ஹீலி
  • பேட்டர்ஸ்: எலிஸ் பெர்ரி (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
  • ஆல்ரவுண்டர்கள்: தீப்தி சர்மா (துணை கேப்டன்), தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், பூஜா வஸ்த்ரகர்
  • பந்துவீச்சாளர்: கிம் கார்த், டைட்டாஸ் சாது

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை