India Women vs South Africa Women, 1st T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

IND W vs SA W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - ஜூலை 05, இரவு 7.30 மணி
Advertisement

IND W vs SA W: Pitch Report

Advertisement

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. மேலும் நாளைய தினம் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அது பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சாதகமாக அமையும். ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், இரண்டாவதாக பேட்டிங்கைத் தேர்வு செய்யும் அணிக்கு கூடுதல் சதகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

IND W vs SA W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 17
  • இந்திய மகளிர் அணி - 09
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 05
  • முடிவில்லை - 05

IND W vs SA W: Live Streaming Details

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

India Women vs South Africa Women Predicted Teams

இந்திய மகளிர் அணி : ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), தயாளன் ஹேமலதா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா தாக்கூர், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்

Advertisement

தென் ஆப்பிரிக்கா மகளிர் : லாரா வோல்வார்ட் (கே), தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், மரிஸான் கேப், நாதின் டி கிளார்க், சுனே லூஸ், சோலே ட்ரோன், மைக் டி ரிடர், நோன்குலுலெகோ மலாபா, அயபோங்கா காகா, துமி செகுகுனே.

IND W vs SA W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், ஷெபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள்: மரிஸான் கப் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், நாடின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: ஆஷா சோபனா, மசபடா கிளாஸ்

India Women vs South Africa Women Fantasy Tips, IND W vs SA W: Dream11 Team, India Women vs South Africa Women: Predicted XIs, IND W vs SA W: Pitch Report, IND W vs SA W Live Streaming Details, IND W vs SA W: Head-to-Head, IND W vs SA W: Dream11 Prediction 1st T20

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News