India Women vs South Africa Women, 2nd T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அபார வெற்றியைப் பதிவுசெய்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நேற்று தொடங்கியது. முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை தொடங்கவுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த அதிர்ச்சி தோல்வியில் இருக்கும் இந்திய மகளிர் அணியானது அதிலிருந்து மீள்வதுடன், நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்துன் நாளை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IND W vs SA W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - ஜூலை 07, இரவு 7.00 மணி
Advertisement

IND W vs SA W: Pitch Report

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் நேற்றைய முதல் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக பேட்டர்கள் ரன்களை குவித்து அசத்தினர். அதிலும் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 190 ரன்களை குவித்தது. இதனால் எஞ்சிய போட்டிகளிலும் இந்த மைதானம் பேட்டர்களூக்கு சாதகமாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனாலும் இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IND W vs SA W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 16
  • இந்திய மகளிர் அணி - 09
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 06
  • முடிவில்லை - 05

IND W vs SA W: Live Streaming Details

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

India Women vs South Africa Women Predicted Teams

Advertisement

இந்திய மகளிர் அணி : ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரேகர், ராதா யாதவ், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்

தென் ஆப்பிரிக்கா மகளிர் : லாரா வோல்வார்ட் (கே), தஸ்மின் பிரிட்ஸ், மரிஸான் கேப், அன்னேக் போஷ், க்ளோ டிரையன், நாதின் டி கிளார்க், அன்னேரி டெர்க்சன், எலிஸ்-மாரி மார்க்ஸ், சினாலோ ஜஃப்டா, அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா

IND W vs SA W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: மரிஸான் கப் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், நாடின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: ரேனுகா சிங் தாக்கூர், அயபொங்கா காகா
Advertisement

India Women vs South Africa Women Fantasy Tips, IND W vs SA W: Dream11 Team, India Women vs South Africa Women: Predicted XIs, IND W vs SA W: Pitch Report, IND W vs SA W Live Streaming Details, IND W vs SA W: Head-to-Head, IND W vs SA W: Dream11 Prediction 2nd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News