இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Sat, May 15 2021 16:42 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா, இந்திய டெஸ்ட் அணிக்காக வாய்ப்பை பெற்றுள்ளார். அதேசமயம் ஷிகா பாண்டே, தனியா பாட்டியா ஆகியோரும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். 

இதன் படி நான்கு டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதியும்,மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 27 தேதி முதலும், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், புனம் ரவுத், பிரியா புனியா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, சினே ராணா, தனியா பாட்டியா, இந்திராணி ராய் , ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ்.

டி 20 இந்தியா அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், சினே ராணா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), இந்திராணி ராய், ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், சிமரன் தில் பகதூர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை