WTC 2023: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்!

Updated: Wed, May 31 2023 20:10 IST
India are amping up their preparations ahead of the WTC 20223 final!
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. ஜூன் 12ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற தவறிய இந்திய அணி இந்த முறை அதை கைப்ப்ற்றும் முன்னைப்புடன் உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் உள்ளது.

அதேவேளையில் இறுதிபொபோட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ரிஷப் பந்த், பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.

 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை