ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Wed, Jul 10 2024 16:52 IST
Image Source: Google

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில்ன் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் வைத்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஹராரேவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 

இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வட் 13 இடங்கள் முன்னேறி 07ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் கெய்க்வாட் பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணியின் அதிரடி ஃபினிஷர் ரிங்கு சிங் 4 இடங்கள் முன்னேறி 39ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

சர்வதேச டி20 பந்துவீசாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ட்ஜே இரண்டாம் இடத்திலும், இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்த ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை