ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!

Updated: Fri, Sep 22 2023 22:20 IST
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா! (Image Source: Google)

உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநால் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திராலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்ன் 52 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.  

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் 71 ரன்களிலும், ஷுப்மன் கில் 74 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெத்திரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடத்தை பிடித்தி அசத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணி சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்த நிலையில் தற்போது ஒருநாள் தரவரிசையிலும் முதலிடத்தற்கு முன்னேறி சாதனைப் படித்துள்ளது.  

இதன்மூலம் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்த இரண்டாவது அணி எனும் சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிய அணிகளில் இச்சாதனையை படைக்கும் முதல் அணி இந்தியா என்பது மற்றுமொரு சாதனை.          

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை