மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!

Updated: Mon, Oct 21 2024 19:52 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முத்ல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்டக்கி உருவாக்கப்பட்ட அணியை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த அணியின் தொடக்க வீராங்கனையாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் கெப்டனாகவும் அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையாக தென் ஆப்பிரிக்க அணியின் தஸ்மின் பிரிஸ் தேர்வாகியுள்ளார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இவர்கள் இருவரும் மிக முக்கிய பங்கினை வகித்தது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் டேனியல் வையட்டிற்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர்நாயகி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி என இரு விருதுகளையும் வென்ற நியூசிலாந்தின் அமெலியா கெர், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வெஸ்ட் இண்டீஸின் டியான்டிரா டோட்டின், வங்கதேச அணியின் நிகர் சுல்தானா, வெஸ்ட் இண்டீஸின் அஃபி ஃபிளெட்சர் என இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர்கள் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர்த்து அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் நியூசிலாந்தின் ரோஸ்மெரி மெய்ர், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மலபா உள்ளிட்டோருக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில், இந்த அணியின் 12ஆவது வீராங்கனையாக நியூசிலாந்தின் ஈடன் கார்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்த அணியில் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், சூஸி பேட்ஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஐசிசி தேர்வு செய்துள்ள மகளிர் உலகக்கோப்பை அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், டேனியல் வியாட்-ஹாட்ஜ், அமெலியா கெர், ஹர்மன்ப்ரீத் கவுர், டியாண்ட்ரா டோட்டின், நிகர் சுல்தானா, அஃபி பிளெட்சர், ரோஸ்மேரி மெய்ர், மேகன் ஷட், நோன்குலுலேகோ மலாபா, 12ஆவது வீரர் - ஈடன் கார்சன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை