2022 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கபில்தேவ் உள்ளிட்ட இந்திய அணியின் ஜாம்பவான்களே தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் திரில் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பெரும்பாலானவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை மிக சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

இதனால் இந்திய அணியை உலகெங்கும் இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் இந்திய அணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலியை புகழ்ந்தும்,வாழ்த்தியும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் கோபஸ் ஒலிவியர், உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இந்திய அணிக்குத்தான் உள்ளது என்றும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாதி உலக கோப்பையை இந்திய அணி ஏற்கனவே வென்று விட்டது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியை பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து கோபஸ் ஒலிவியர் பேசுகையில், “பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடரை பாதி வென்று விட்டது, இந்த வெற்றி என் மனதில் உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது என தோன்றுகிறது. 

இது போன்ற வெற்றியை ஒரு அணி சுவைத்து விட்டால் அந்த அணி அதே வேகத்தில் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் வெற்றி உண்மையிலேயே மிகவும் அருமையான ஒன்றாகும், கடைசி மூன்று ஓவரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தபோது விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். என்னைப் பொருத்தவரை உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் தகுதி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News