ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Oct 12 2023 13:10 IST
Image Source: Google

2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றில் இருந்து வெளியேறி வந்தது. அதன்பின் ரோஹித் சர்மா தலைமையில், பேட்டிங் யூனிட்டில் உள்ள அனைத்து வீரர்களும் தைரியமாக விளையாடுவது என்று அணியின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரோஹித் சர்மா ஆட்டத்தை எப்பொழுதும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் வேகமாக துவங்குவதை பற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட ஆரம்பித்தார். 

இதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக ஆரம்பித்தது ஆனால் அவருடைய சராசரி குறைய ஆரம்பித்தது. மேலும் அவருடைய சதங்களும் குறைந்து அரை சதங்கள் அதிகமாகின. ரோஹித் சர்மா தன்னுடைய வேலை அடிக்க பெரிய தொடக்கம் தருவது மட்டுமல்ல அதிரடியான தொடக்கம் தருவதும்தான் என்று நேற்றைய பேட்டிகள் கூட மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில், நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் அதிரடி சதம் அடித்த ரோஹித் சர்மா பற்றி பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “அவர் பல சதங்களை அணிக்காக தவற விட்டுள்ள காரணத்தினால், அவர் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் 60, 70 ரன்களுக்கு வந்தாலும் கூட மேற்கொண்டு தாக்கி விளையாடவே நினைக்கிறார். மக்களுக்கு சதத்தை எட்டுவது எப்படி? என்பது குறித்து புரிதல் இருக்க வேண்டும். ரோஹித் ரிஸ்க் எடுக்கக்கூடிய நபர். அதனால் அவர் அரைசதம் கடந்து சதம் அடிக்க முடியாமல் 60 70 ரன்களில் வெளியேறி கொண்டு இருந்தார். 

அதே சமயத்தில் அவர் அணியை எத்தனை முறை சிறப்பான தொடக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று பாருங்கள். ஆனால் அவர் இதைத்தான் விரும்புகிறார். இது அணிக்கு நன்மை தரக்கூடிய ஒன்று. அவர் சில முறை தவறவிட்டார். ஆனால் நம்மை மகிழ்வித்தார். இன்று அவர் ஒரு சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். மேலும் அவர் அடித்த சிக்ஸர்கள் நம்ப முடியாதவை” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை