ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்!

Updated: Wed, Feb 21 2024 13:59 IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டியில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியது. 

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் அவர் தரவரிசையில் இந்த உயரத்தை எட்டியுள்ளார். 

அதேசமயம் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 153 ரன்களை எடுத்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றபடி இப்பட்டியளின் முதலிடத்தில் நியூலாந்தின் கேன் வில்லியமன் தொடர்ந்து முதலிடத்தைக்கவைத்துள்ளார். மேலும் டெஸ்ட் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்களில் விராட் கோலி(07ஆம் இடம்) மட்டுமே டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் மற்றொரு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறியதுடன் காகிசோ ரபாடாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை தனதாக்கியுள்ளார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி பட்டியளின் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். இதில் மூன்றாம் இடத்தை வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியின் அக்ஸர் படேல் ஒரு இடம் முன்னேறி இப்பட்டியளின் 4ஆம் இடத்தை தனதாக்கியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை