SA vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?

Updated: Tue, Nov 05 2024 13:45 IST
Image Source: Google

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நவம்பர் 8ஆஅம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 சர்வதேச போட்டியில் மீண்டும் ஒருமுறை தொடாக்க வீரராக களமிறங்குவார்கள். இதில் சஞ்சு சாம்சன் கடைசி டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் களமிறங்கியதுடன் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.

மறுபுறம், அபிஷேக் சர்மா பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறிய நிலையிலும், அணி நிர்வாகம் அவர் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா நான்காம் இடத்திலும் களமிறங்க கூடும். மேற்கொண்டு ஐந்தாம் இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஃபினிஷர்களாக ரிங்கு சிங் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தேர்வுசெய்யப்படலாம்.

 

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி பேசினார், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், அர்ஷ்தீப் சிங் மீண்டும் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்த உள்ளார். இது தவிர இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளுக்கு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்க்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். அவர்களுடன் அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், யாஷ் தயால், அவேஷ் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை