ஐசிசி தரவரிசை: மீண்டும் மகுடம் சூடிய இந்தியா!

Updated: Fri, May 14 2021 08:54 IST
Image Source: Google

கடந்தாண்டு தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. 

ஆனால் அதேசமயம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என தொடரை கைப்பற்றிய போதிலும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

மேலும், இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தும் அசத்தியுள்ளது. அதன்படி 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 18 போட்டிகளில் விளையாடி 120 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 

மூன்றாம் இடத்தில் 109 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணியும், நான்காம் இடத்தில் 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை