ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!

Updated: Mon, Jan 02 2023 18:42 IST
Image Source: Google

நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டைட்டில் பட்டத்தை வென்று கொடுத்ததன் மூலம் டி20 தொடருக்கான கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்ற பாராட்டைப் பெற்ற ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக மூன்று டி20 தொடரில்(அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்,மற்றும் நியூசிலாந்து) கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.

மேலும் ரோஹித் சர்மா இல்லாததால் டி20 தொடருக்கான ஆக்டிங் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவிர்க்கு , இலங்கை அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் கேப்டனாக திகழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லிமிடெட் ஓவர் தொடருக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிப்பதற்காக இந்திய அணி இப்படி திட்டமிடுகிறதா, அல்லது எதிர்வரும் 2023 உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியின் வெற்றிகர கேப்டனாக உருவாகியுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலர், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால் அவரை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்க முடியாது என இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்,ஹர்திக் பாண்டியாவிற்கு நிரந்தர கேப்டன் பொறுப்பு கொடுப்பது பற்றி தன்னுடைய கருத்தை செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் உண்மையில் சிறப்பாக உள்ளது, அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக செயல்பட்ட விதமும் சரி.. அல்லது இந்திய அணிக்காக அவர் செயல்பட்ட விதமும் சரி. அவர் அணியை சிறப்பாக வழி நடத்துகிறார் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும், அவருடைய கேப்டன்ஷியை பார்த்து நான் வியக்கிறேன். 

ஆனால் அவரை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை. ஏனென்றால் அவரை நிரந்தர கேப்டனாக நியமித்தால் அவருடைய உடற்தகுதி கேள்விக்குறியாகவிடும், அவர் மற்றதை விட தன்னுடைய உடல் தகுதியில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும், இந்திய அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால் நிச்சயம் இந்திய அணி நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை