Hardik pandya fitness
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
முன்னதாக அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் காரணமாக அவருக்கு கேப்டன் பதவி வழங்கவில்லை என தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.
Related Cricket News on Hardik pandya fitness
-
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
2023 உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய போது எடுத்த புகைப்படத்தையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47