WTC Points Table: முதலிடத்தை இழந்த இந்தியா!

Updated: Tue, Jul 25 2023 14:46 IST
Image Source: Google


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக இரு அணிகளுக்கும் 2023 – 2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் டெஸ்ட் தொடர் தொடங்கியது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். இதில், டெஸ்ட் போட்டி டை ஆனால், இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், டிரா ஆனால், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி 12 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால், நேற்று டெஸ்ட் போட்டியில், என்னதான் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்தாலும், போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. அதன்படி 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 16 புள்ளிகள் பெற்றது.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே, 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் 24 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடம் பிடித்திருக்கும். தற்போது 12 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியதன் மூலமாக 12 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2 வெற்றி, ஒரு டிரா உடன் 26 புள்ளிகள் பெற்று 3 ஆவது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து ஒரு வெற்றி மற்றும் ஒரு போட்டி டிரா உடன் 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை