பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக கான்பெர்ராவில் நடைபெறும் இந்த பகலிரவு பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
பார்டர் கவாஸ்கர் தொடர் போட்டி அட்டவணை
- முதல் டெஸ்ட் - பெர்த் - நவம்பர் 22 - 26
- இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) - அடிலெய்ட் ஓவல் - டிசம்பர் 06-10
- மூன்றாவது டெஸ்ட் - பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18
- நான்காவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) - மெல்போர்ன் - டிசம்பர் 26-30
- ஐந்தாவது டெஸ்ட் (புத்தாண்டு டெஸ்ட்) - சிட்னி - ஜனவரி 03-07(2025)