டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!

Updated: Tue, Nov 28 2023 21:23 IST
டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தபோது எனது இதயமே நெருங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணி வலிமையாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். 

தற்போது இந்த கோப்பையை நாம் தவறவிட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை நமது அணியே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் டி20 வடிவத்திலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒரு உலகக்கோப்பையை கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சச்சின் கூட ஒரு உலகக்கோப்பை கையில் ஏந்த ஆறு முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. எனவே நிச்சயம் முயற்சி செய்தால் நமக்கு உலகக்கோப்பை கிடைக்கும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை