இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Mar 16 2023 11:41 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம்- மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளதால், அதற்கான பயிற்சிகளில் இந்திய அணி முழு மூச்சாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தான் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரருமான கேப்டன் ரோஹித் சர்மா தனது மச்சானின்  திருமணத்தில் பங்கேற்க உள்ளதால், முதல் ஒருநாள் போட்டியில் விளையாட  மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மும்பை போட்டியில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும், ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. எனினும் இதுவரை மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்தியா எந்த யுத்தியை பயன்படுத்தி மும்பையில் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அதேவேளை ரோஹித் சர்மா இல்லை என்றால் சுலபமான வழி, அவருக்கான மாற்று தொடக்க வீரர்   விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷனை களமிறக்குவதே ஆகும். இல்லையேனில் கேஎல் ராகுலை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் என நட்சத்திர பேட்டர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் பந்துவீச்சில் முகமது ஷமி, உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

மறுபக்கம் தாய் இறப்பு காரணமாக பாட் கம்மின்ஸ் ஒருநாள் அணியிலிருந்து விலகியதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் மற்றும் நீண்ட காலமாக அணியில் விளையாடாமல் இருந்த கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அந்த அணியின் பேட்டிங்கில் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மார்னஸ் லபுசாக்னே ஆகியோரும் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார், சீன் அபேட், ஆடம் ஸாம்பா ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 143
  • இந்தியா - 53
  • ஆஸ்திரேலியா - 80
  • முடிவில்லை - 10

உத்தேச லெவன்

இந்தியா - ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி/உம்ரான் மாலிக்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கே), மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ஆடம் ஸாம்பா, குல்தீப் யாதவ்

கேப்டன்/துணைக்கேப்டன் விருப்பத்தேர்வுகள் - ஷுப்மான் கில், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஸ்டீவ் ஸ்மித்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை