IND vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் வீரர்கள் படைக்கவுள்ள சில சாதனைகள்!
இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள்: இங்கிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையடாவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சில சாதனைகள் படைக்கும் வாய்ப்பும் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. இப்போட்டியில் படைக்க வாய்ப்புள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
விராட் கோலியின் 14000 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். கோலி இதுவரை விளையாடிய 283 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 58.18 சராசரியாகவும், 93.54 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 13906 ரன்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெயிலை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா
இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மேற்கொண்டு 1 சிக்ஸர் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 331 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் கூட்டாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள பட்லர்
இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் இப்போட்டியில் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனியை முந்தும் வாய்ப்பை பெற்றுளார். இதுவரை பட்லர் 372 போட்டிகளில் விளையாடி 355 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் தோனி 538 போட்டிகளில் விளையாடி 359 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
300 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் குல்தீப் யாதவ்
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 13ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை, குல்தீப் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 159 போட்டிகளில் 166 இன்னிங்ஸ்களில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து குல்தீப் யாதவ் 2 விகெட்டுகளை வீழ்த்தினால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 10ஆவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார்.