இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: இடம், நேரம், நேரலை & அணிகளின் விவரம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டானாக சூர்யகுமார் யாதவ் தொடரும் நிலையில், துணைக்கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமியும் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் கோப்பை தொடரில் விளையாடிய துரூவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, ஹ்ர்ஷித் ராணா உள்ளிட்டோருக்கும் இந்த டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
டி20 தொடர் நடைபெறும் மைதானம் மற்றும் நேரம்
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா; எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை; சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்; மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே; வான்கடே மைதானம், மும்பை. இத்தொடரில் அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரலை விவரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
இந்தியா - இங்கிலாந்து டி20 அணிகள்
இந்திய அணி: அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்