இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. மேற்கொண்டு தொடர் மழை காரணமாக மைதானம் முழுவது கவர் செய்யப்பட்டது. இதனால் போட்டி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதனால் மழை நின்ற பிறகு தான் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
மேலும் உலகிலேயே சிறந்த மழைநீர் வடிகால் உள்ள மைதானத்துக்கு பெயர் பெற்றது பெங்களூரு சின்னசாமி மைதானம். அதனால் மழை நின்றால் சிறிது நேரத்திலேயெ போட்டியை மீண்டும் தொடங்கும் வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்களும் முதல் நாள் போட்டிக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டத்தின் உணவு மற்றும் தேநீர் இடைவேளை என இரண்டு செஷன்களும் முழுமையாக கைவிடப்பட்டது.
அதன்பின்னரும் மழை பெய்த காரணத்தால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாம், பெங்களூருவில் மேலும் சில நாள் மழை நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் அடுத்தடுத்த நாள்களும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்