இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதிலும் இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் என அதிரடியான ஆட்டத்தில் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு சமீபத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்பதே உண்மை அதிலும் அக்ஸர் படேலைத் தவிற மற்ற வீரர்கள் தொடர்ந்து பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.
அதிலும் ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் என இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பேசப்படும் நபர்களே சமீப காலமாக ரன்களை வாரி வழங்குவது அணிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மூழு உத்வேகத்துடன் இத்தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது. அணியின் பேட்டிங் ஆர்டரை டி காக், ஹென்றிக்ஸ், வேண்டர் டுசென், மில்லர், மார்க்ரம் ஆகியோர் வலுசேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி, பிரிட்டோரியஸ், தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜ் என வரிசைக்கட்டி இருப்பது அந்த அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 20
- இந்தியா - 11
- தென் ஆப்பிரிக்கா - 8
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல்/முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா (கே), டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - தீபக் ஹூடா, அக்சர் படேல், ஐடன் மார்க்ரம்
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, ஜஸ்பிரிட் பும்ரா, அன்ரிச் நோர்ட்ஜே