இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது.

Advertisement

இதில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதே உத்வேகத்துடன் டி20 தொடரிலும் களமிறங்கிய இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

அதிலும் அறிமுக வீரராக களமிறங்கிய ரவி பிஸ்னோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

அதேபோல் வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் ஜாம்பவான் அணியாக திகழ்ந்துவருகிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடர் மற்றும் முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அணி டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • இந்தியா வெற்றி - 11
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
  • முடிவில்லை - 1
Advertisement

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், தீபக் சாஹர்/ ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், கீரன் பொல்லார்ட் (கே), ரோஸ்டன் சேஸ்/ ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், ஓடியன் ஸ்மித், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரோவ்மன் பாவல்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், ஒடியன் ஸ்மித், அகீல் ஹொசைன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News